Sunday, February 20, 2011

<>மலேசியா வாசுதேவன் பாடல்கள்<>


<>மலேசியா வாசுதேவன் நினைவலைகள்<>


முதல் மரியாதையில் மலேசியா வாசுதேவன் அவர்களின் வசீகரக் குரல்...



 
 
 

 

 

 
திரைப்படம் - அவர் எனக்கே சொந்தம் - மலேசியா வாசுதேவன்

 
அழகான பட்டாம்பூச்சி



 
பனி விழும் பூ நிலவே
 

 
 

 

 
திரைப்படம்: "நண்டு - குரல்: மலேசியா வாசுதேவன்
 

http://www.thiraipaadal.com/singer.php 


 

 

Tuesday, February 15, 2011

<>மலேசியாவாசுதேவன் நடடா ராசா என்ற வண்டிக்காரன் பாடல்<>

மலேசியா வாசுதேவன்

தமிழீழத்துக்காக பாடிய பாடல்…


நடடா ராசா என்ற வண்டிக்காரன் பாடல்…



சில நாட்களுக்கு முன்பாகத்தான் திரு.மலேசியா வாசுதேவன் அவர்களின்

"நடடா ராசா" என்ற வண்டிக்காரன் பாடலை என் வலைப்பதிவில் இட்டு
அவரைப்பற்றிய நினைவுகளில் என் மனம் அவருடைய ஈழத் தமிழர்பால்
உள்ள ஈரத்தை எண்ணி மனம் நெகிழ்ந்து போயிருந்தேன். அவரோடு தொடர்புகொண்டு என் நெஞ்சார்ந்த வாழ்த்தைச் சொல்ல அவாவுள்ளவனாக இருந்தேன். சட்டென்று அவகாசமேதுமில்லாமல் மறைந்துபோன அந்தக் கலைஞனை எண்ணி கண்ணீர் உகுக்கிறேன்.

தினமணியில்வெளியான கட்டுரையில் என் இரங்கலைப் பதிவு செய்திருந்தேன். அவருக்கான‌ இனி என் உள்ளத்து உணர்வுகளை இனி யாரிடம் சொல்வேன்? அந்தப் "பூங்காத்து" இனி திரும்பாது என்று எண்ணுகையில் மனித வாழ்க்கையை வெல்லும் மரணத்தை மனதால் சபிக்கிறதைத் தவிர வேறேதும் செய்ய இயலா நிலையை உணர்கிறேன். என்னிதயத்தில் நீங்காத "வாசு"அவர்களே நின் மரணம் வலி இல்லா
நிம்மதியை அளித்திருக்கும் என்று என் மனதை நானே ஆற்றுப்படுத்திக்கொள்கிறேன்.

தினமணியிலும் தமிழ் உலக மடற்குழுவிலும் எனதன்பருக்காக நான் வாசித்த‌ கண்ணீரஞ்சலி:

மனங்கவர்ந்த இனிய பாடகர்;அவருடைய இறுதிக் காலகட்டம்
அவருக்குள் நிம்மதியின்மையை ஏற்படுத்தியிருந்தது. அவருக்குத் துன்பம் வந்த‌ வேளையில் அவரோடு பழகிய திரையுள்ளங்கள் கூட அவரைப் பார்க்க வரவில்லை என்ற ஏக்கம் விலகாமலே மறைந்து போனார். அவருடைய பல பாடல்கள் செவிக்கினிய விருந்தாக இருந்தது. அவருடைய ஏக்கங்களை ஒரு வார இதழில் மனம் திறந்து சொல்லியிருந்தார். இருந்தபோதும்கூட திரையுலகம் அவரை ஏனோ
தவிர்த்து விட்டது மனநெருடலான ஒன்று; துன்பம் சூழ்ந்திருந்த வேளையில் அவருக்கு ஆறுதலாய் ஒரு சிலர் ஆற்றுப்படுத்தும் விதமாக நடந்துகொண்டிருந்தால் கூட‌ மனிதர் இன்னும் கொஞ்ச காலம் தெம்பாக நம்பிக்கையோடு வாழ்ந்திருப்பார்;நன்றி மறந்த உலகம் என்பது அவரைப் பொருத்தவரை நித‌ர்ச‌ன‌மாகிப்போன‌து. அவ‌ர‌து வாரீசாக‌ ம‌க‌னையும் ம‌க‌ளையும் திரையுல‌க‌த்திற்கு விட்டுச் சென்றுள்ளார். இருந்தாலும்

"பூங்காத்து திரும்புமா?" ம‌ன‌ம் வ‌லிக்கிற‌து.

அவ‌ரை இழ‌ந்து வாடும் உற‌வுக‌ளுக்கு

ஆழ்ந்த‌ இர‌ங்க‌ல்க‌ள்.

ஆல்பர்ட்,

அமெரிக்கா.