Saturday, August 29, 2009

“எம்மைக்காக்க எவரும் இல்லையா…?” நாடகம்.

நாம் தமிழர் இயக்கத்தின் அறுத்தெரிவோம் முள்வேலிகளை நிகழ்வின் ஈழ மக்களின் நிலையை விளக்கும் “எம்மைக்காக்க எவரும் இல்லையா…?” நாடகம்.


முள்வேலி சிறையிலிருக்கும் தமிழினம்-சீமான்

தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு சனிக்கிழமை சீமான் அளித்த பேட்டி:

இலங்கையில் போர் முடிந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் 3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்.

20 நாடுகளின் துணையோடுதான் போரில் வெற்றிபெற்றதாக இலங்கை அதிபர் ராஜபட்ச கூறியுள்ளார்.

தற்போது 3 லட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதை அந்த 20 நாடுகளில் ஒன்றுகூட கண்டிக்காதது ஏன்?

தமிழ் இனம் அங்கு அழிந்து கொண்டிருக்கிறது.

அதை மத்திய, மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கின்றன.

இதைக் கண்டித்தும், சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை ஐ.நா. மேற்பார்வையில் அவரவர் வாழ்விடங்களில் குடியமர்த்தக் கோரியும், “நாம் தமிழர் இயக்கம்’ சார்பில் ஜூலை மாதம் மதுரையில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தினோம்.

அடுத்ததாக இம்மாதம் 29-ம் தேதி தூத்துக்குடியில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த உள்ளோம்.

தமிழ் இனம், மொழிக்காக போராடுவதற்காக கடந்த மே மாதம் உருவானதுதான் “நாம் தமிழர் இயக்கம்’. சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது இந்த இயக்கம். தமிழ் இனம் மற்றும் மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் இந்த இயக்கத்தின் நோக்கம்.

2010-ம் ஆண்டு மே 17-ம் தேதி “நாம் தமிழர் இயக்கம்’ அரசியல் இயக்கமாக மாறும்.

இதற்காக சென்னையில் அன்றைய தினம் பேரணி, பொதுக்கூட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இலங்கையில் தமிழர்கள் படும் இன்னல்கள் குறித்து இந்தியா மற்றும் சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை திருப்பும் வகையில் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை நடத்துவோம் என்றார் சீமான்.

பேட்டியின் போது நாம் தமிழர் இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டி.எம்.எஸ். பிரபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.