Friday, December 31, 2010

<>ஈழ விடுதலை கிடைக்கும்வரை ஓய மாட்டேன் – சீமான்<>

ழ விடுதலை கிடைக்கும்வரை ஓய மாட்டேன் என்று சென்னையில் நடைபெற்ற பெரியார் & எம்ஜிஆர் நினைவு நாள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் ஆவேசமாகக் கூறியுள்ளார்.


மூட நம்பிக்கைகளில் இருந்து மக்களை வெளிக்கொண்டு வரப் போராடியவர் பெரியார். ஈழத்தமிழர்களுக்கு எம்ஜிஆர் போல உதவி செய்த தலைவர்கள் யாரும் இல்லை



கடந்த 60 ஆண்டுகளாக இலங்கையில் தமிழர்கள் செத்து மடிகிறார்கள்.

தமிழக மீனவர்களைச் சிங்கள இராணுவம் கொன்று குவிக்கிறது. இனிமேலும் தமிழன் தாக்கப்பட்டால் இங்குள்ள சிங்கள மாணவர்களை அடிப்போம் என்று பேசியதற்காக தேசியப் பாகாப்பு சட்டத்தில் என்ன கைது செய்தார்கள். 5 மாதம் சிறையில் இருந்தேன். சிறையில் இருந்த என் தம்பிமார்கள் முருகன், பேரறிவாளன், சாந்தன், தங்கை நளினி ஆகியோர் என்னைச் சந்தித்து விடக்கூடாது என்பதில் சிறைத்துறை அதிகாரிகள் மிகுந்த கவனமாக இருந்தனர். ஒரு லட்சம் துப்பாக்கிகளுக்கு மத்தியில் இலங்கைக்கு சென்று பிரபாகரனை சந்தித்து வந்தவன் நான். இதற்கெல்லாம் அஞ்சுபவன் அல்ல.

தற்போது என் தோளில் இரண்டு சுமைகள் உள்ளன. ஒன்று ஈழ விடுதலை. மற்றொன்று சிறையில் இருக்கும் என் தம்பிமார்களின் விடுதலை. இந்த இரண்டும் நடக்கும் வரை நான் ஓயமாட்டேன். தனி ஈழத்தை வென்றே தீருவோம். ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்ததில் காங்கிரசுக்கு பெரும்பங்கு உண்டு. எனவே காங்கிரசை வீழ்த்துவதே எங்கள் லட்சியம். அதுவரை இந்த சீமான் ஓயமாட்டான்.

இன்று காங்கிரஸ் அரசில் ஊழல் மலிந்துவிட்டது. அதில் இருந்து தப்புவதற்காக விடுதலைப்புலிகள் மீது வீண்பழி சுமத்தத் தொடங்கி உள்ளனர். விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம் என்பது உண்மையா? விடுதலைப்புலிகளால் தலைவர்கள் உயிருக்கு ஆபத்து என்பது உண்மையா? விடுதலைப்புலிகளைப் பற்றி நான் பேசினால், சீமான் கோடி, கோடியாக பணம் வாங்கி விட்டான் என்று கூறுகிறார்கள். விடுதலைப்புலிகளிடம் இருந்து நான் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கி இருப்பதாகவும், அந்த பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் பொய்யான தகவலைப் பரப்பி வருகிறார்கள். இவ்வளவு பணம் இருந்தால், அதை ராஜபக்சேயிடம் கொடுத்து எங்கள் பகுதியை எழுதி வாங்கி இருக்க மாட்டோமா? தமிழுக்காக உயிரை இழக்கவும் தயாராக உள்ளேன். இவ்வாறு சீமான் மிகவும் ஆவேசமாகப் பேசினார்.

Tuesday, December 21, 2010

<>ஈழம் – நாட்டுப்பண்<>

ஈழம் – நாட்டுப்பண்(காணொளி இணைப்பு)





இந்த நாட்டுப்பண் உலகில் வாழும் ஈழத்தமிழருள் அபிப்பிராயத்துக்கு விடப்பட்டது. அவர்களின் திருத்தங்களுடன்


மீண்டும் பதிவு செய்யப்பட்டு இன்று வெளியிடப்படுகிறது.


வான்முட்டும் எழில்கொண்டு


வளமாகவும் – இன்பத்


தேன்சொட்டும் தமிழ்சேர்ந்து


நலமாகவும்


யாழ்ப்பாண நகரோடு


பெரும்கல்வியும் – எம்மை


வாழ்விக்க உணவூட்டும்


திருவன்னியும்


மட்டு வாவிக்குள் மீன்பாடும்


இசை சந்தமும் – வெற்றி


மேவும் வெண் தீவெங்கும்


உயிர் சொந்தமும்


கிளிநொச்சி வளமுல்லை


அம்பாறையும், தெள்ளத்


தெளிந்தோடும் பொன்னருவி


ஆற்றோரமும்


சூழ்கொண்ட மன்னாரின்


முத்தாரமும் – எங்கும்


சுடரேற்றும் திருகோண


மலை மொத்தமும்


நாளும் நிலை உயர்வாக


செயலாற்றுவோம் – எங்கள்


ஈழத்தமிழ் திருநாட்டின்


புகழ்போற்றுவோம்


வாழிய வாழிய வாழியவே


எங்கள் ஈழத் தமிழ்த்


திருநாடு வாழியவே! ராகம் : மத்தியமாவதி

<>சீமான் காணொளி-ஜெயா டிவியில்<>